Ayalaan Teaser: ஏலியனுடன் களமிறங்கிய சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தின் டீசர் தேதி அறிவிப்பு..!

Ayalaan Teaser: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் (Ayalaan) படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Continues below advertisement

 ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “அயலான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். மேலும் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன்  உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாராகும் இந்த படம் ஏலியன் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான காட்சிகள் அதிகளவில் இடம் பெற உள்ளதால் தரமான கிராஃபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளும் வகையில் படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைக்கப்பட்டது. கிட்டதட்ட 5 ஆண்டுகளாக இப்படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி ஹிட்டடித்த நிலையில் அடுத்த அப்டேட்டுகளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். அப்படியாக  கடந்த ஏப்ரல் மாதம் கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில், “அயலான் ' திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின்  CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம்.  அயலான்,  ஒரு பான்-இந்தியன் திரைப்படம் என்பதால்  அதிக எண்ணிக்கையிலான CGI  காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும். . உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும்  என தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் சில தினங்களுக்கு வெளியான அறிவிப்பில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அயலான் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இயக்குநர் ரவிகுமார், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரோடு ஏலியன் இருப்பது போன்ற போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரிலீஸ் தேதி மாறிப்போனதால் சோகத்தில் இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அயலான் படத்தின் அப்டேட் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


மேலும் படிக்க: Thalapathy 68: சத்தமே இல்லாமல் நடைபெற்ற சம்பவம்.. தளபதி 68 படத்திற்கு பூஜை போட்டாச்சு.. இணையும் பிரபலங்கள்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola