90களின் இறுதி மற்றும் 2000மாவது ஆண்டில் தமிழக இளைஞர்கள் பலரையும் தனது நடனத்தாலும் புன்னகையாலும் கவர்ந்து இழுத்தவர் நடிகை சிம்ரன். முன்னணி ஸ்டார்ஸுடன் நடித்த சிம்ரன் பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். துவக்க காலத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு துள்ளலுடன் பதிலளிக்கிறார் சிம்ரன்...
உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம்?
என்கிட்ட எல்லாரும் கேட்கும் முதல் கேள்வி இதுதான். நான் நிறைய முறை இதற்கு பதில் கூறிவிட்டேன். ஆனாலும், நீங்கள் கேட்கிறீங்க. சொல்றேன். சிம்ரன்’ன்ற பெயர் வட இந்தியாவில் ரொம்பவே பிரபலமானது. சிம்ரன் என்றால் ‘தியானம்’ என்று அர்த்தம்.
சினிமாவுக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?
நான் பள்ளி, கல்லூரி படிப்பு முடித்ததும் ஜெயா பட்சனை சந்தித்தேன். பிறகு இந்தியில் நடித்தேன். அப்படியே என் திரைப்பயணம் தொடங்கியது.
உங்கள் குடும்பம் பற்றி...
அம்மா, அப்பா, பாட்டி, தங்கை.. அழகான குடும்பம். எனக்கும் தங்கைக்கும் சண்டையே வந்தது இல்லை. நாங்கள் எப்போதும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்.
ஒரு திரைப்படத்திற்கு எது முக்கியம்?
நல்ல கதைதான்.
ரம்பாவுக்கும் உங்களுக்கு என்ன தகராறு?
எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இது ரூமர்.
உங்களுக்கும் அப்பாஸ்-க்கும் இடையே எழும் கிசுகிசு பற்றி...
நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே, இருவரும் நல்ல நண்பர்கள். அவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியானது.
உங்கள் ரசிர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீங்க....
வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் முக்கியம். என் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கவே விரும்புகிறேன். இதையே எல்லாருக்கும் சொல்ல விரும்புகிறேன். எப்போதும் வாழ்க்கையில் ஜாலியாக இருங்கள்.
ரசிகர்களுக்காக ஒரு பாடல் பாடுங்களேன்...
மின்னல் ஒரு
கோடி எந்தன் உயிர்
தேடி வந்ததே ஓ லட்சம்
பல லட்சம் பூக்கள்
ஒன்றாகப் பூத்ததே... என்ற பாடலைப் பாடினார். அவரிடமிருந்து சிரிப்புடன் விடைபெற்றோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்