`மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 


`வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படங்களும், டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் அளித்தது. தான் இதுவரை நடிக்காத புதிய கதாபாத்திரத்தில் வித்தியாசமான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிம்பு. 



இந்நிலையில் இன்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில், `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகர் சிம்பு. ராயல் என்ஃபீல்டு பைக்கில் அமர்ந்திருக்கும் சிம்புவின் இந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.