சிவகார்த்திகேயன்..


திறமை என்ற ஒன்று இருந்தால் முன்னேறிவிடலாம் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். திருச்சியில் பிறந்த சிவகார்த்திகேயன் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே பல குரல் கலையில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார். அப்போதே பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.


இதனையடுத்து விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை எண்ட்ரி ஆன சிவா, அதன் பின் அந்த சேனலின் செல்ல பிள்ளையானார். சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன் இயக்குநர் பாண்டிராஜ் மெரினா படம் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.




அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் குழந்தைகளை கவர்ந்தது. இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவானார் சிவா. காமெடி என்ற ட்ராக்கை தாண்டி மாஸ் ஹீரோ சப்ஜெக்டுக்குள்ளும் நுழைந்தார் சிவா. அதன்பிறகு படம் தயாரிப்பு, பாடல் பாடுவது என அடுத்தடுத்தும் பயணப்பட்டுள்ளார் சிவா.  அவ்வப்போது பாடல் எழுதுவதும் உண்டு. எதற்கும் துணிந்தவன் படத்தில் சும்மா சுர்ருனு பாடல், கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு இப்போ கல்யாண வயசு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி போன்ற பாடல்களை சிவா எழுதியுள்ளார். எதிர்வரும் பீஸ்ட் படத்திலும் அரேபிக் குத்து பாடலை சிவா எழுதியுள்ளார். இலக்கண, இலக்கியம், எதுகை மோனை ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் பார்த்தால் சிவாவின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவதும் உண்டு. ஆனால் பாடல் எழுதவே தனி பாடலாசிரியர்கள் பலர் இருக்கையில் நடிகர்களே இப்படி பாடல் வேலையை கையிலெடுப்பது ஏனோ என்ற கேள்வியும் ஒரு பக்கம் வைக்கப்பட்டது..




நா.முத்துக்குமார்..


இந்நிலையில் சிவகார்த்திகேயன் தொடர்பான ஒரு முக்கியத் தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவரை தான் எழுதிய பாடல்களுக்கு வாங்கிய சம்பளத்தை எல்லாம் மறைந்த கவிஞர் நாமுத்துகுமார் குடும்பத்துக்கு கொடுத்து வருகிறாராம் சிவகார்த்திகேயன். இது தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தத் தகவலை ஏபிபி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைக் கேட்ட பலரும் சிவகாரத்திகேயனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். உதவி செய்வது ஒருபுறம் என்றாலும் அதனை வெளிக்காட்டாமல் செய்து வருவது மேலும் பாராட்டக்குறியது எனக் குறிப்பிட்டுள்ளனர்.


 


SS Balaji Interview | “அண்ணாமலை செய்வது மலிவு அரசியல்”- கொந்தளித்த S.S. பாலாஜி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண