‛நான் அதுக்காக வரல...’ மாநாடு கேள்விக்கு ‛நோ’ நாடு பதில் சொன்ன டிஆர்!

மாநாடு படம் குறித்து டி.ராஜேந்தர் பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.  ஆனால்படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார்.

Continues below advertisement

டி.ஆர் வழக்கு தொடர்ந்ததற்கு இயக்குநரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். 


இந்நிலையில் சிட்டிசன் திரைப்படத்தை இயக்கிய சரவண சுப்பையா தற்போது புதிதாக இயக்கியிருக்கும் மீண்டும் படத்தின் சிறப்பு காட்சியை இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது பேசிய அவர், “சின்ன படங்களை சிதைத்து கொண்டிருக்கிறார்கள். விபிஎஃப் சார்ஜ் பெரிய படங்களை பாதிக்காது. உலகம் முழுக்க விபிஎஃப் சார்ஜை நிறுத்திவிட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஒரே தேசம் ஒரே வரி என்கிறோம்ல. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை வரி 8 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.


100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் 12 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். 100 ரூபாய்க்கு மேல் டிக்கெட் எடுத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு LBT வரியை நீக்க வேண்டும்.

இது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக 29ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். சின்ன படங்களை காப்பாற்ற வேண்டும்.

‘மீண்டும்’ படத்தில் மத நல்லிணக்கம் குறித்தும், ஈழ தமிழர்கள் குறித்தும் வசனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்காக இங்கு வந்ததற்கு நான் பெருமைப்படுகின்றேன். தமிழன் என்றால் ஒரு பயம் இருக்க வேண்டும்” என்றார்.

அப்போது, அவரிடம் மாநாடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதிலளிக்க மறுத்த டி. ராஜேந்திரன், “ நான்   ‘மீண்டும்’ படத்திற்காக வந்தேன்.  நான் தனியாக பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கும்போது மாநாடு குறித்து கேள்வி கேளுங்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: ‛பில்லா மோதிரம்... அரபு வளையல்கள்...’ அன்னபூர்ணி அரசு அம்மாவின் மேக்கப் கலெக்ஷன்ஸ் இவை தான்!

NEET PG Counselling Strike: டெல்லியில் மருத்துவர்கள் மீது தடியடி; நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம்!

Continues below advertisement
Sponsored Links by Taboola