Just In





Pathu Thala Update: மார்ச் 3 ஆம் தேதி காத்திருக்கும் “சர்ப்ரைஸ்” .. பத்து தல படக்குழு வெளியிட்ட அப்டேட்..!
மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் “பத்து தல” படம் ரிலீசாகவுள்ளது.

நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள பத்து தல படத்தின் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சிலம்பரசன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிப்பில் “பத்து தல” படம் ரிலீசாகவுள்ளது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கும் நிலையில், கன்னட படமான மஃப்டியின் ரீமேக்காக பத்து தல படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், இயக்குநர் கௌதம் மேனன், கலையரசன் ஆகியோர் நடிக்கும் நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக பத்து தல படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது.
இதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 30 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று, பத்து தல படத்தின் முதல் பாடலாக “நம்ம சத்தம்” வெளியாகியிருந்தது.நடுஇரவு 12.06 மணிக்கு வெளியான இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தார். பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுயிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பத்துதல படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 3 ஆம் தேதி சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் சற்று அதிருப்தியடைந்தனர். மேலும் படம் வெளியாக இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.