காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் சிலம்பரசனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி மாதம் வந்தாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். ஒருவாரம் கொண்டாடப்படும் இந்த விழாவின் நிறைவு நாளான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலன் - காதலி , கணவன் - மனைவி மட்டும் தான் இந்த தினத்தை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என்பது இல்லை. அதேசமயம் எல்லா உறவிலும் அன்பு என்ற ஒன்று உள்ளது. அதனால் காதல் செய்யாதவர்கள் கூட அன்பை பரிமாறும் விதமாக பெற்றோர்கள், சகோதரிகள் உள்ளிட்டவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.
இதனிடையே நிறைய காதலர் தின வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிலம்பரசன் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதாவது அவர் நடித்த மன்மதன் படத்தில் இடம் பெற்ற முக்கியமான வசனங்களில் ஒன்று “வாழ்க்கைல யார் ஃபர்ஸ்ட் முன்னாடி போறாங்கன்னு முக்கியம் இல்லை...Last-ல யார் ஃபர்ஸ்ட் வராங்கரதுதான் முக்கியம்” என்பது. இதனை ஒரு மேடையில் பேசும் போது சிம்பு மாற்றி பேசியிருப்பார்.
அதாவது, “ஃபர்ஸ்ட் யாரு ஃபிகரை பிக் பண்ணாங்கன்னு முக்கியம் இல்ல.. லாஸ்ட் யாரு தள்ளிட்டு போறாங்கன்னு தான் முக்கியம்”. இந்த வசனத்தோட கடைசி தான் ரொம்ப முக்கியம். ‘உன் ஃபிகரை பிப்ரவரி 14 அன்னைக்கு நான் தள்ளுறேன்’ என சிம்பு அந்த வீடியோவில் பேசியிருப்பார். இளைஞர்கள் மத்தியில் பேசும் அவர், அந்த நிகழ்வை கலகலப்பாக கொண்டுபோகும் நோக்கத்தில் பேசியிருந்தாலும் காதலர் தினத்தன்று மட்டுமல்லாமல் காதலில் தங்கள் துணைக்கு தெரியாமல் தில்லு முல்லு செய்யும் சிலருக்கு இது சமர்ப்பணம் என கமெண்டில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
சிலம்பரசனின் திரைப்பயணம்
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிலம்பரசன் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், சிறந்த நடனமாடக்கூடியவர் என பல திறமைகளை கொண்டுள்ளார். இரு பிரபல நடிகைகளுடன் காதலில் விழுந்த சிம்புவுக்கு அது கைகூடாமலே போனது இன்றளவும் அவரது ரசிகர்களை சோகம் கொள்ளும் வைக்கும் நிகழ்வாகும். அதேசமயம் தனது படங்களில் காதல் பாடல்களால் ஃபீல் பண்ண வைத்து விடுவார். குறிப்பாக மன்மதன் படத்தில் இடம்பெற்ற “காதல் வளர்த்தேன்” பாடலும் சரி, வல்லவன் படத்தில் இடம்பெற்ற “லூசுப்பெண்ணே” பாடலும் சரி சிம்புவின் காதலின் வலியை சொல்லும் சிறந்த பாடல்களாக பார்க்கப்படுகிறது.