3BHK

எட்டுத்தோட்டாக்கள் , குருதி ஆட்டம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கியுள்ள திரைப்படம் 3BHK. சித்தார்த் , சரத்குமார் , தேவயானி , மீதா ரகுநாத் , சைத்ரா அச்சார் , யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அம்ரித் ராம்நாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்கிற ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமாக படமா உருவாகியுள்ளது 3BHK. மாவீரன் படத்தை தயாரித்த அருண் விஸ்வா இந்த படத்தை தயாரித்துள்ளார். வரும் ஜூலை 4 ஆம் தேதி 3BHK திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தை பார்த்த நடிகர் சிம்பு பாராட்டு தெரிவித்துள்ளார்

3BHK படத்தை பாராட்டிய சிம்பு

தனது எக்ஸ் பக்கத்தில் " 3BHK ஒரு அழகான மனதிற்கு இதமளிக்கும் படம். இந்த படம் உங்களை ஒரு உணர்ச்சிகரமான பயணத்திற்கு அழைத்து செல்லும். சித்தார்த் மற்றும் சரத்குமார் சிறப்பாக நடித்துள்ளார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என 3BHK படத்தை பாராட்டி சிம்பு பதிவிட்டுள்ளார்