Chithha Movie: ஓடிடியில் வெளியான சித்தா படம்.. தியேட்டரில் மிஸ் பண்ணியதாக புலம்பும் ரசிகர்கள்..
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “சித்தா” படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “சித்தா” படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் “சித்தா”. இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த சித்தா படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு திபு நினன் இசையமைத்திருந்தார். சித்தா படத்தில் நிமிஷா சஹான், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தது.
Just In




குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து அழுத்தமான கதைக்களத்தை கையாண்ட சித்தா படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற்ரது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான சித்தா படம் ரூ.25 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கமல்ஹாசன், மணி ரத்னம் உள்ளிட்ட பலரும் சித்தா படத்தை பாராட்டி தள்ளினர். இப்படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது.
ஆனால் படம் வெளியாகி 2 மாதங்களை கடந்த போதிலும் ஓடிடி தளத்தில் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் சித்தாவுடன் ரிலீசான பிற படங்கள் மட்டுமல்லாது, அதன்பிறகு வெளியான படங்கள் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி விட்டதால் எப்போது சித்தாவை வெளியிடப்போகிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் சித்தா படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை இந்தி மொழி தவிர்த்து தென்னிந்திய மொழிகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சித்தா படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு படத்தை தியேட்டரில் தவற விட்டு விட்டோமே என புலம்பி வருகின்றனர். மேலும் படம் தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.