ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘வாரிசு’ . இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா என நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் நேர்காணல்களில் படக்குழுவினர் கூறும் தகவல்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. 






தமன் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ரஞ்சிதமே வெளியானது. விஜய் பாடியிருந்த இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்  இரண்டாம் பாடலாக கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சிம்பு பாடிய “தீ தளபதி” பாடல் வெளியானது. இந்த பாடலும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 






இதனிடையே நடிகர் ஷாம் நேர்காணல் ஒன்றில், விஜய்யிடம் துணிவும் பொங்கலுக்கு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்கன்னு சொன்னேன். அதற்கு அவர், "ஹே ஜாலிப்பா... வரட்டும். அவரும் நம்ம நண்பர்தானே. இந்தப் படமும் நல்லா போகட்டும். நம்ம படமும் நல்லா போகட்டும்" என்று விஜய் கூறியதாக தெரிவித்தார். அதே நேர்காணலில், 12பி படத்தில் நான் ஹீரோவாக நடித்த நேரத்தில் விஜய்யை சந்தித்தேன். அப்போது என்னடா வரும்போதே ஜோதிகா, சிம்ரன் என 2 குதிரைகள் கூட வர்ற என கூறினார். நானும் எல்லாம் கடவுள் செயல் என கையை மேலே உயர்த்தினேன் என தெரிவித்தார். இயல்பாக பேசுவதாக கூறி நடிகர் விஜய் பற்றி ஷாம் கூறிய சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.