டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘பாராசூட்’ பற்றிய அறிவிப்பை பகிர்ந்துள்ளது.
பாராசூட்
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ஶ்ரீதர்.K இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும். பல சூப்பர்ஹிட் படங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கிய நடிகர் ஷாம், பன்முகத் திறமை கொண்ட நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இந்த மூவருடன், திறமைவாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓடிடி தளங்களின் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து விட்டது. இருக்கின்ற இடத்திலேயே உலக மொழிகளில் வெளியான படங்கள், வெப் தொடர்கள், சீரியல்கள் என அனைத்தையும் கண்டு விடலாம் என்பதால் நாளுக்கு நாள் இதன் வாடிக்கையாளர்களும் அதிகரித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி சேனல்களும் தங்களுக்கென பிரத்யேக ஓடிடி தளங்களை கொண்டுள்ளது. இப்படியான நிலையில் ஓடிடி வருகையால் பழைய படங்களையும் நாம் காத்திருக்காமல் உடனுக்குடன் கண்டு மகிழ்கிறோம் என்பதால் இது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படும் விஷயமாக மாறிவிட்டது. இதனிடையே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பழைய படங்கள் சில ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் இடம் பெற்றுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது. அதே நேரத்தில் ரசிகர்களிடையே மிகப் பிரபலமான கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற இணையத் தொடர்களையும் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் மக்கள் கண்டு மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.