IIFA விருதுகள்
இந்திய திரைப்பட நடிகர்களை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி IIFA. அந்த வகையில் 2023 ஆண்டுக்கான IIFA விருதுகள் நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. பாலிவுட் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் சிறந்த நடிகருக்கான விருது ஜவான் படத்திற்காக ஷாருக் கானுக்கு வழங்கப்பட்டது.
மணிரத்னம் காலில் விழுந்த ஷாருக் கான்
ஷாருக் கான் நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தன. ஐந்து ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட அமையாத நிலையில் ஷாருக் கான் சகாப்தம் முடிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறி வந்தார்கள். விமர்சனங்களை எல்லாம் தகர்த்து எறியும் வகையில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து மூன்று மெகா ஹிட் படங்களைக் கொடுத்தார் ஷாருக் கான். இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு படங்களும் 1000 கோடி வசூல் செய்த நிலையில் டங்கி திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது.
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து வழங்கினர். இந்த விருதைப் பெற்றுகொள்ள மேடையேறிய ஷாருக் கான் இயக்குநர் மணிரத்னம் காலில் விழுந்தார். நிகழ்வில் பேசிய ஷாருக் கான் ' எனக்கு சினிமாவில் பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுத்த மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரஹ்மானுக்கு நன்றி. இந்த விருது எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. உணமையை சொன்னால் விருதுகளின் மேல் எனக்கு பெரிய பேராசையே உள்ளது. இந்த விருதிற்காக நாமினேஷனில் இருந்த ரன்பீர் கபூர் , ரன்வீர் சிங் , விக்ராந்த் மாஸி ஆகிய அனைவரும் விருதிற்கு தகுதியானவர்கள்" என ஷாருக் கான் தெரிவித்தார்.
மேலும் படிக்க : Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?