நான் மோடியாகவும், அமித்ஷாவாக மணிவண்ணனாகவும் நடிக்க கதை தயார். படத்தின் பெயர் சனாதனம் என நகைச்சுவையுடன் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது வைரலாகி வருகிறது.
அண்மையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அகில இந்திய அளவில் டிரெண்டானது. உதயநிதி ஸ்டாலினை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தத்துடன், அவரது தலைக்கும் விலை பேசப்பட்டது. எனினும், தனது கருத்தில் இருந்து பின் வாங்காத உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சை திரித்து டிரோல் செய்வதாக கூறினார். உதயநிதிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பேசிய சத்தியராஜ், உதயநிதி ஸ்டாலின் ரொம்ப தெளிவாக பேசி இருப்பதாகவும், அவரது சிந்தனையும், தெளிவான கருத்துக்கும் துணிச்சலுக்கும் பாராட்டுகள் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் குறித்து சத்யராஜ் பேசியது வைரலாகி வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர் கே.ஜீவபாரதியின் ’இயக்குநர் மணிவண்ணனும் நானும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற சத்யராஜ் மணிவண்ணன் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ‘ அமித்ஷாவாக மணிவண்ணன் நடிக்க, மோடியாக தான் நடிப்பதற்கு கதை ரெடியாக உள்ளது. படத்தின் தலைப்பு சனாதனம்” என்றார்.
ஒருமுறை காரில் சென்று கொண்டிருக்கும் போது தன்னை பார்த்த நிழல்கள் ரவி, “டேய் மச்சான் நீ மோடியா நடிச்சால் கரெக்ட்டா இருக்கும்” என்றார். ”அப்பொழுது மோடி பிரதமராக கூட இல்லை. குஜராத்தின் முதலமைச்சராக தான் இருந்தார். அப்போவே அந்த மோடி கேரக்டருக்கு என்னை பேசினார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய சத்யராஜ், ஒரே முகத்தில் பல முகங்கள் தெரிவது ஒரு நடிகனுக்கு சிறப்பு என்றார். இந்தியில் தன்னை சாய் பாபாவாக நடிக்க சொன்னதாகவும், அதற்கு தான் ஒரு நாத்திகன், எப்படி சாய்பாபாவாக நடிப்பது என சிந்தித்ததாகவும் கூறினார். சினிமாவின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சத்யராஜ், ஆரம்பத்தில் தன்னை சினிமாவுக்கு வரவேண்டாம் என சிவக்குமார் அறிவுறுத்தியதையும் கூறினார். ஏனெனில் சினிமாவில் தொடர்ந்து வெற்றியை கொடுத்தால் மட்டுமே பேசப்படுவார்கள் என்ற சத்யராஜ், அந்த காலத்தில் அமைதிப்படை படத்தை ஈசியாக எடுத்தோம். ஆனால், இந்த காலத்திற்கு ஏற்ற வெற்றிப்படத்தை எடுப்பது மிகவும் கடினம் என்றார்.
எம்.ஜி.ஆர். மணிவண்ணன் நினைவுகளை பகிர்ந்து கொண்ட சத்யராஜ், மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி நடித்த நினைவுகளையும் கூறி அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
மேலும் படிக்க: Marimuthu: மாரிமுத்துவுக்கு நிகர் அவர் தான்... குணசேகரன் கதாபாத்திரத்துக்கு நேர்ந்த சோகமான முடிவு!
Vijay Antony: ”எனது குடும்பத்தை நினைத்து பயப்படுவேன்“ - வைரலாகும் விஜய் ஆண்டனியின் பேச்சு