தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடியன்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் நடிகர் சதீஷ். கிரேஸி மோகனின் நாடக குழுவில் நடித்து வந்த சதீஷ் அவரின் அன்புக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படம் , மதராச பட்டிணம், மான் கராத்தே, தாண்டவம், கத்தி, பைரவா, வேலைக்காரன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான அண்ணாத்த , ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கும் நாய் சேகர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ரா நடித்து வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சதீஷ். நாற்காலியில் அமர்ந்த படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் , நாய் சேகர் படத்தின் நாயகி பவித்ராவிடம் , செவ்வக வடிவில் , மொபைல் அளவில் இருக்கும் கட்டை ஒன்றை கொடுத்து “ பவித்ரா இந்தாங்க சிவகார்த்திகேயன் பேசுறாரு” என கொடுக்கிறார் சதீஷ்.
தூக்கத்திலிருந்து திடீரென விழித்த பவித்ரா , கையில் இருப்பது கட்டை என்பது தெரியாமல் “ஹலோ சார்” என பேச செட்டில் இருந்த அனைவரும் சிரிக்கின்றனர். பிறகுதான் அது கட்டை என பவித்ராவிற்கு தெரிகிறது. உடனே ‘சார் ‘ என கடிந்து கொண்ட பவித்ரா கட்டையை தூக்கி வீசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் நாய் சேகர் படத்தை புரமோட் செய்யும் சதீஷ் , முன்னதாக கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாயுடன் , எனிமி படத்தி “மாலை டும் டும்” பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனை ரீட்வீட் செய்த சதீஷ் எனது ‘நாய் சேகர்’ படத்தை புரமோட் செய்ததற்கு நன்றி ‘ என கேலியாக ஒரு பதிவிட்டிருந்தார். அதுவும் செம வைரலானது. நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் சூழலில் அதன் அடுத்த அப்டேட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.