கத்துக்குட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சரவணன், நடிகர் சூரியாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது இமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இப்படம் தஞ்சாவூர் பின்னணியில் படமாக்கப்பட உள்ளது. ஒளிப்பதிவாளர் வெல்ராஜ் டிஓபி செய்கிறார். படம் கடந்த ஆண்டு தொடங்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது .

Continues below advertisement


மீண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், நடிகர் சசிகுமார் தனது கதாபாத்திரத்தை பற்றி விளக்கியுள்ளார். இதில் அவர் ஜோதிகாவின் மூத்த சகோதரராகவும், சமுத்திரகனி ஜோதிகாவின்  கணவராகவும் நடிப்பதாக சசிகுமார் தெரிவித்துள்ளார். இந்த படம் ஜோதிகா தனது நேர்மையான கணவரையும், வன்முறையாளனான சகோதரனையும் எப்படி சமாளிக்கிறார் என்பதை உணர்ச்சிமிகுந்த கதைக்களத்தில் காட்டியிருப்பதாக என்று படக்குழுவினர் கூறியுள்ளனர் .