சேலம் ஜெயா திரையரங்கிற்கு நடிகர் சேலம் சரவணன் தனது குடும்பத்துடன் ராயன் படத்தை பார்க்க வந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சேலம் சரவணன், "ராயன் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு தனுஷிற்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. தனுஷ் படத்தை சிறந்த முறையில் இயக்கி உள்ளார். தனுஷ் ஒரு இயக்குனரின் மகன். தனுஷ் அப்பா படத்தில் தாய் மனசு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தேன். தற்போது தனுஷ் படத்தில் வில்லன் ஆக நடித்துள்ளேன். அப்பா படத்தில் ஹீரோவாகவும், மகன் படத்தில் வில்லன் ஆகவும் நடிக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. எனக்கு அது கிடைத்துள்ளது. தனுஷ் ஒரு ஜென்டில்மேன். இயக்குனராக தனுஷ் ஒரு பேய். தனுஷ் கதை எழுதுகிறார், பாடல் எழுதுகிறார், படத்தை இயக்குகிறார், நடிக்கிறார் சினிமாவில் எல்லாம் செய்கிறார். இங்கிலீஷ் படம், ஹிந்தி படம் நடிக்கிறார். 50 படங்களில் தனுஷ் மிகப்பெரிய ஸ்டாராக மாறிவிட்டார். அவரது ஐம்பதாவது படத்தில் நான் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு தனுஷ் சாருக்கு நன்றி . 



ராயன் படம் பிளாக்பஸ்டர் ஹிட். தனுஷ் 100 கோடி ரூபாய் பட்ஜெட் ஹீரோவாக மாறிவிட்டார். நடிகர் தனுஷிடம் பிரண்ட்லியாக பேசலாம். இயக்குனர் தனுஷிடம் அப்படி பேச முடியாது. இயக்குனர் தனுஷ் பேய் மாதிரி வேலை செய்கிறார். இயக்குனராக அவரைப் பார்த்தாலே பயமாக உள்ளது. எனது முதல் காட்சி படம் ஆக்கும்போது, எனது சீனை தனுஷ் நடித்துக் காட்டினார். அதைப்போல் என்னால் செய்ய முடியுமா என நினைத்து பயந்துவிட்டேன். சினிமாவில் நடிப்பதற்கு நான் பயந்தது இல்லை. ஆனால் அந்த இடத்தில் நான் பயந்து விட்டேன். தனுஷ் அனைவரிடமும் அருமையாக பழகுவார். தங்கமான மனிதர். 



நான் ஒரு படத்தை இயக்க உள்ளதாக இருக்கிறேன். பெரிய ஹீரோவிடம் நடிப்பதற்கு கேட்டு உள்ளேன். அந்த படத்தில் வில்லன் நான்தான். லவ், ஆக்சன், திரில்லர் என படம் அமைய உள்ளது. இதில் யார் ஹீரோ ஹீரோயின் என கண்டிப்பாக சொல்கிறேன். என்னோட கதை சென்னை சுற்றி நடப்பது போன்ற காட்சிகள் தான் உள்ளது. டப்பிங் தியேட்டரில் தனுஷ் என்னை பாராட்டி விட்டார். நான் கூறுவது போல செய்தது நீங்கள் தான் என்று 


தனுஷ் புதுமுகத்தை வைத்து மற்றொரு படம் இயக்கி படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த படம் இயக்குவதற்கு தயாராக இருக்கிறார்" என்று கூறினார்.