தமிழ் சினிமாவின் உறுதியான நடிகைகளுள் ஒருவரும் ராதாரவியின் மகளுமான ராதிகாவின் மூத்த மகள் ரேயான். தனது பெற்றோர்கள் மீதான தனது அன்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களை பதிவு செய்து வருபவர். அன்னையர் தினத்தன்று தனது அம்மா ராதிகாவிற்கு உருக்கமான பதிவு ஒன்றைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி இருந்தார் ரேயான். தற்போது தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது வளர்ப்புத் தந்தையான சரத்குமாருக்கும் அதே போல் ஒரு வாழ்த்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


தந்தையர் தின வாழ்த்து


”என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வந்த மனிதர்.  நீங்கள் எங்களுக்காக செய்யும் எல்லாவற்றுக்கும் நன்றி. முக்கியமாக எங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்காகவும் நாங்கள் வீழும்போது எங்களை தூக்கிவிடுவதற்காகவும். 


வாழ்க்கையில் நாம் எத்தனை முறை சரிந்தாலும் முயற்சிகளைக் கைவிடாமல் இருக்கவும், தோல்வி என்பது சகஜமான ஒன்று என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்ததற்காகவும்  நன்றி. தங்க இதயம் கொண்ட என் அப்பாவிற்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்” என உருக்கமாக ரேயான் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், “நீ எப்போதும் என் மீது பொழியும் அன்புக்கும் நன்றி ரே” என நடிகர் சரத்குமாரும் ரேயானின் பதிவில் உருக்கமாக பதிலளித்துள்ளார்.






 


ரேயான்


ராதிகா மகள் ரேயான்


நடிப்பு பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், தன் அம்மா ராதிகா பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தும், ரேயான் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு அதன் பின் சினிமா பக்கமே ஒதுங்கவில்லை. வெளிநாட்டுக்குச் சென்று தன் படிப்பை முடித்த ரேயான், கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.


இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில்,  தன் பெண் குழந்தைக்கு தன் அம்மா மீதான பேரன்பைக் காண்பிக்கும் வகையில், ராத்யா என ரேயான் பெயரிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.


போர் தொழில்


 நடிகர் சரத்குமார் நடிப்பில் முன்னதாக வெளியாகியுள்ள போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சரத்குமார், அஷோக் செல்வன், சரத்பாபு,  நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளார்கள். கலைச்செல்வன்  இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒர் நல்ல க்ரைம் த்ரில்லராக படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.