கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.  

Continues below advertisement

மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணற்றில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடிகர் சரத்குமார் `பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது . 

 

Continues below advertisement

இதையடுத்து, நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டி அளித்தார். படம் குறித்து தனது அடுத்த பட அப்டேட் குறித்தும் பல்வேறு விஷயங்களை நடிகர் சரத்குமார் பகிர்ந்தார். ” வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வம்சி , அதே போல விஜய் கூட்டணி .. நிச்சயமாக அடுத்த பிரம்மாண்ட திரைப்படம். எனக்கு இந்த படத்தில் எனக்கான ஸ்கோப் அதிகமாக இருக்கிறது. நான் அஜித் , சூர்யா , தனுஷ் யாருடனும் நடித்தது கிடையாது. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடிக்கும் பொழுது எப்படியாக இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கிறேன்.

நான்  சூர்யவம்சம் 175 வது  வெற்றி விழாவில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சொன்னேன். அந்த விழாவில் கலைஞர் எல்லாம் கலந்துகொண்டார். அந்த சமயத்தில் நான் ஸ்டார் என்ற நினைப்பெல்லாம் இல்லை, நான் மனதில் பட்டதை சொன்னேன். நான் எப்போதுமே விஜய்யின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர் ஈடுபாட்டுடனும் எளிமையுடனும் இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர் எல்லாரிடமும் சமமாக பழகுவார். அஜித்துடன் நான் நடிக்க அவர் ஆசைப்பட்டு , அதற்கு ஏற்ற மாதிரி கதை வந்தால் , இயக்குநரும் விரும்பினால் நான் நடிக்க தயார் “ என்றார் சரத்குமார்