ராதிகா சரத்குமார்

 நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானார். லண்டனில் படிப்பை முடித்து வந்த ராதிகா தனது முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தினார். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளைப் பெற்று தந்தது. ரஜினி , விஜயகாந்த் , கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Continues below advertisement

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவரிடம் இருந்து பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்ட ராதிகா அவரிடம் இருந்தும் பிரிந்தார். மேலும் மறைந்த நடிகர் விஜயகாந்தை காதலித்து வந்தார் ராதிகா. ஆனால் இந்த காதல் கைகூடவில்லை. இதனைத் தொடர்ந்து திருமணமாகி விவாகரத்து பெற்ற சரத்குமாரை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். சரத்குமார் ராதிகா தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. சரத்குமாரின் முன்னாள் மனைவியின் மகளான வரலட்சுமிக்கும் சமீபத்தில் திருமணமானவது குறிப்பிடத் தக்கது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். கணவன் மனைவியாக ராதிகா சரத்குமார் ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமான தம்பதிகளாக இருந்து வருகிறார்கள்.

Continues below advertisement

என் முதல் மனைவியை ராதிகா அரவணைத்துக் கொள்வார்

தனது மனைவி ராதிகா பற்றி சரத்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் " ராதிகா என்னுடைய முதல் மனைவியையும் அவரது குழந்தைகளையும் அரவணைத்துக் கொள்வார் . என் முதல் மனைவிக்கும் ராதிகாவுக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. அவரிடம் ராதிகா அவ்வளவு அன்பாக பழகுவார். அந்த வகையில் அவர் கிரேட் தான். வரலட்சுமி நடிக்க கூடாது என்று நான் சொன்னபோது கூட என் முதல் மனைவியுடன் வந்து பேசி அவர் தான் என்னை சம்மதிக்க வைத்தார்" என்று சரத்குமார் பேசியுள்ளார். 

தனது மனைவி ராதிகா பற்றி நடிகர் சரத்குமார் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். 


மேலும் படிக்க : Shah Rukh Khan : விருது மேடையில் இயக்குநர் மணிரத்னம் காலில் விழுந்த ஷாருக் கான்...வைரலாகும் வீடியோ