சூர்யா

கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மீது அதிகப்படியான வெறுப்பும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. சார்பட்டா ,  புறநாநூறு , வணங்கான் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா தவறவிட்டது சரியா தவறா என்கிற விவாதம் ஒருபக்கம் நடந்து வர இன்னொரு பக்கம்   கடந்த மூன்று ஆண்டுகளில் சூர்யா பெரிய ஹிட் படமே கொடுக்காததால் அவரது மார்கெட் சரிந்துள்ளதாக பேசப்படுகிறது. மறுபக்கம் சூர்யா ரசிகர்கள் மாஸான ஒரு கம்பேக் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அடுத்தபடியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 44 , மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 படத்தை மிக ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

சூர்யா பற்றி நடிகர் சமுத்திரகனி 

நடிகர் சூர்யா பற்றி இயக்குநர் நடிகருமான சமுத்திரகனி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இதில் அவர் ' நான் பார்த்து வியந்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர் சூர்யா. அவருடைய மனசு அவ்வளவு அற்புதமானது. தங்கமான ஒரு பிள்ளை அது . அவ்வளவு சின்ஸியரா வேலை பார்ப்பார். ஒவ்வொரு ஷாட் முடிந்தது அந்த ஷாட்டில் நாம் எவ்வளவு சக்தியை கொடுத்து நடித்தோம் என்பதை பார்த்து பார்த்து நடிப்பவர். அந்த மாதிரியான ஒரு மனிதனுக்கு இப்படி நடந்தது எவ்வளவு வலியை கொடுத்திருக்கும் . நம்ம வீட்டு பிள்ளையை நாம் ஏன் குத்தி கொள்ளனும். தாயை கொன்றுவிட்டு நாம் எப்படி சாப்பிட முடியும். சூர்யா மறுபடியும் வருவார். ஃபீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து  வருவார்" என சமுத்திரகனி தெரிவித்துள்ளார். 

சூர்யாவின் 44 ஆவது படமாக உருவாகும் இப்படத்தை 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க ஜெயராம் , ஜோஜூ ஜார்ஜ் , கருணாகரன் உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுபக்கம் ஆர்ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.