தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் முத்திரை பதித்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சம்பத். தமிழில் நடிகர் விஜயகாந்தின் நெறஞ்ச மனசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.அதன் பிறகு இயக்குநர் நடிகர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் முக்கியக் கதாப் பாத்திரங்களில் தென்பட்டவர். அதுமட்டுமல்ல. தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.



பிரபல தொலைக்காட்சி ஒன்றில் அவருடனான நேர்காணலில் தனது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், ‘நெறஞ்ச மனசு சினிமாவில்தான் முதன்முதலில் விஜய்காந்த் சாருடன் நடித்தேன்.படம் சரியாக ஓடவில்லை. அடுத்த படத்தில் அவர் நடித்தபோது அவருடைய டைரக்டரிடமிருந்து நடிக்க சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. பிறகுதான் எனக்குத் தெரிந்தது விஜய்காந்தே எனக்காக அவரிடம் பரிந்துரைத்திருந்தார். படத்தில் ஒரு போலீஸாக நடித்தேன். சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென என்னிடம் வந்து,’படத்துல ரொம்ப சின்ன ரோல்தான் ஆனா நடிங்க. கொஞ்சம் கொஞ்சமா மக்கள் நம்மை கவனிப்பாங்க’னு சொன்னார். அவருக்கு என்னை பெர்சனலாகத் தெரியாது.ஆனால் எனக்காக ஹெல்ப் செய்தார். நெறஞ்ச மனசு படத்தில்தான் எனக்கு வெங்கட் பிரபு அறிமுகம் கிடைத்தது.அதன்பிறகு அவரோட இணைந்து சரோஜா, சென்னை 28 ஆகிய படங்களில் நடித்தேன்’ என்றார்.





சம்பத் சரோஜா திரைப்படத்தில் அவரது நடிப்புக்காக தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.ஆரண்ய காண்டம் உள்ளிட்ட தமிழின் மிக முக்கியப் படங்களில் கவனிக்கத் தக்க கதாப்பாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. . திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் மால்குடி டேஸ் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடரில் 2006ம் ஆண்டிலேயே அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.