சைஃப் அலிகான்


நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்கு திருட வந்த நபரால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையே உலுக்கியுள்ளது. தனது வீட்டின் உள்ளே நுழைந்த கொள்ளையரை சைஃப் அலிகான் பார்த்துள்ளார். அப்போது, இந்த கொள்ளை முயற்சியை அவர் தடுக்க முற்பட்டபோது இந்த கத்திக்குத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவு இந்த  சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைஃப் அலிகானை கத்தியால் குத்திய பிறகு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 


இந்த நிலையில், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை அந்த நபர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.


ஆறு இடத்தில் கத்திகுத்து






திருடன உடன் ஏற்பட்ட மோதலில் சைஃப் அலி கான் ஆறு இடத்தில் கத்தியால் குத்தப்பட்டார். இதில் இரண்டு மெலோட்ட்மான காயங்களும் , இரண்டு காயங்கள் ஓரளவிற்கு ஆழமானவை மீதி இரண்டு காயங்கள் ஆபத்தான காயங்கள் என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். சைஃப் அலிகானின் முதுகெலும்பின் கீழ் பகுதியில் குத்தபட்ட கத்தி சிக்கியிருந்தது. இது முதுகு தண்டு வடத்தை குத்தியதால் Spinal fluid எனப்படும் திரவக் கசிவு இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் சைஃப் அலிகான் முதுகில் இருந்த 2.5 இன்ச் கத்தி நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட கத்தியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.