Actor Sai Dheena: குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய நடிகர் தீனா..! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தீனா. இவரது முழுப்பெயர் சாய் தீனா. ஸ்டண்ட் கலைஞரான இவர் விருமாண்டி படத்தில் சிறைவார்டனாக நடித்தார். அதன்பின்பு, சில சில வேடங்களிலும், சண்டைக் கலைஞராகவும் நடித்து வந்தார். ஷங்கரின் எந்திரன் படத்திலும், விஜய்யின் தெறி படத்திலும், தனுஷின் வட சென்னை படத்திலும் நடித்து புகழ்பெற்றார்.

Continues below advertisement

இந்த நிலையில், இன்று இவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளார். புத்த துறவி மௌரியா முன்னிலையில் புத்த மதத்தை தழுவுவதற்காக 22 உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டு புத்த மதத்திற்கு மாறியுள்ளார். தற்போது, அவர் குடும்பத்தினருடன் புத்த மதத்திற்கு மாறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் தீனா படங்களில் சண்டைக்கலைஞராக நடித்தாலும், தனிப்பட்ட பேட்டிகளில் அவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். மேற்கூறிய படங்கள் மட்டுமின்றி ராஜா ராணி, மாநகரம், மெர்சல், பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் இவர் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். திமிரு புடிச்சவன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். 

கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் தன்னால் இயன்ற அளவுக்கு நடிகர் தீனா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Samantha Interview: 'இது ஒரு போர்க்களம்.. போராடிட்டு இருக்கேன்.. இப்போ உடல்நிலை இப்படிதான் இருக்கு’: சமந்தாவின் முழுமையான பேட்டி..

மேலும் படிக்க : Ajith: ‛தனக்கு அடிபட்ட போதும் அஜித் ஷூட்டிங்கை நிறுத்த விரும்பல’ - நினைவுகளை பகிரும் நடிகர் திருமுருகன்!

Continues below advertisement
Sponsored Links by Taboola