S.J. Surya : 54 வயதில் திருமணத்திற்கு தயாராகும் எஸ். ஜே. சூர்யா... இருக்கு... ஆனா இல்ல
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. ஒரு இடைவேளைக்கு பிறகு இயக்குனராக இருந்தவர் நடிகராக மாறி ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். தற்போது பல படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இயக்குனராக இருந்தாலும் நடிகராக இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் உண்டு.
இயங்குனர் டு நடிகர் :
இளைய தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைபடத்தில் மூலம் வில்லனாக மிகவும் சிறப்பாக நடித்தார் எஸ்.ஜே. சூர்யா. அதனை தொடர்ந்து மான்ஸ்டர், இறைவி, மாநாடு, டான் என பல படங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்துவிட்டார். மேலும் எஸ். ஜே. சூர்யா - நடிகை யாஷிகா அனந்த் நடிப்பில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் "கடமையை செய்".
திருமணம் குறித்த வதந்தி :
54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே இருந்து விட்டார். சமீபத்தில் அவரது குடும்பத்தார் அவருக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்கள் என்றும் அதற்காக மணப்பெண்ணை தேடி கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற வதந்திகள் காட்டு தீயாய் பரவின.
எனக்கு திருமணமா?
திருமணம் குறித்த வாதாதிகளுக்கு பதில் அளித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதெல்லாம் ஒரு ஆதாரமற்ற வதந்தியே தவிர அது போல எந்த ஒரு சிந்தனையும் எனக்கு இல்லை அதற்கு எனக்கு நேரமும் இல்லை. தனிமையில் இருப்பதால் என்னால் எனது படங்களில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது என தனது தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கம் நடிகர் எஸ்.ஜே. சூர்யா.
பிஸி ஷெட்யூல் :
எஸ்.ஜே. சூர்யா தற்போது விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்திலும் இளைய தளபதி நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.