அறிமுக இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் புகழ் வர்ஷிணி மற்றும் ஷாலினி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சொட்ட சொட்ட நனையுது. இப்படத்திற்கு கலக்கப் போவது யாரு புகழ் ராஜா கதை, வசனம் எழுதியுள்ளார். இன்றைய இளைய தலைமுறை சந்திக்கும் சிக்கலான பிரச்னைகளை காமெடியாக திருப்பமா கதையாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் கலக்கப் போவது யாரு டீமில் இருப்பவர்களும் நடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தனது சிறு வயதிலேயே சொட்டை விழும் நாயகனுக்கு திருமணம் செய்ய திட்டமிடுகிறார்கள். இதன் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து கதை நகர்வதாக இயக்குநர் நவீர் பரீத் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ரோபோ சங்கர் கலகலப்பான பேச்சால் பீதியை கிளப்பியிருப்பியுள்ளார்.
சொட்ட சொட்ட நனையுது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது, சொட்ட சொட்ட நனையுது திரைப்படத்தை 18 நாளில் எடுத்து முடித்தோம். உண்மையிலேயே என் ஜாதிக்காரனோட படம். கன்டன் கிடைத்துவிட்டதா. என் ஜாதிக்காரன் படம் என மீண்டும் அழத்தமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரோபோ சங்கர், நகைச்சுவை ஜாதி படம். முழுக்க முழுக்க நகைச்சுவை தான். நீங்க கலக்கப்போவது யாரு எபிசோடை பார்த்து எப்படி என்ஜாய் செய்வீர்களோ அதேபோன்று இந்த படத்திலும் ஒட்டுமொத்த KPY டீமும் இருக்கிறது என தெரிவித்தார். இதுபோன்ற ஒரு இசை வெளியீட்டு விழாவை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. இவ்வளவு தூரம் கை தட்டி சிரித்து ரசிக்க முடிந்தது. வந்தவர்கள் அனைவரும் மிமிக்ரி செய்து சிரிக்க வைத்தார்கள் என தெரிவித்த ரோபோ சங்கர், நடிகர் கமல்ஹாசன் போன்று மிமிக்ரி செய்து சொட்ட சொட்ட நனையுது படக்குழுவை பாராட்டி பேசினார்.