குடிப்பழக்கத்தை கைவிடுமாறு தன்னை தனுஷ் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர்.


 ரோபோ சங்கர்


சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த தனக்கென பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளவர் நடிகர் ரோபோ ஷங்கர். காமெடி, மிமிக்ரி என பல திறமைகளைக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியனாக அறியப்பட்டார். ஆனால் உடல்நலக் குறைவால் சில காலம் அவரைப் பற்றிய எந்த விதமான தகவல்களும் தெரியாமல் இருந்தன.


இந்நிலையில், ரோபோ சங்கர் முற்றிலும் அடையாளம் தெரியாமல் உடல் எடை குறைந்து சில மாதங்களுக்கு முன் மீண்டும் வருகைத் தந்தார். மஞ்சள் காமாலை நோயினால் ஏற்பட்ட தீவிர பாதிப்புகளே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தீவிர குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதில் இருந்து மீள்வதற்கு தான் மரணம் வரை சென்று வந்ததாகவும் ரோபோ சங்கர் தெரிவித்தார்.


குடிப்பழக்கத்தை கைவிட்ட தனுஷ்


இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ரோபோ சங்கர், நடிகர் தனுஷூடன் மாரி படத்தில் இணைந்து நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது தனக்கும் தனுஷூக்கும் பொதுவாக இருந்த ஒரு பழக்கம் இப்போது இல்லை என்று கூறினார்.


பொதுவாகவே தான் நிறைய மது அருந்தும் பழக்கம் உடையவன் எனவும், ஒரு சில பார்ட்டிகளில் மட்டுமே மது அருந்தும் பழக்கம் தனுஷூக்கு இருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்தப் பழக்கத்தை தனுஷ் கைவிட்டு தன்னையும் குடிப்பதை நிறுத்தச் சொல்லி ஆலோசனை வழங்கியதாகவும் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். தனுஷ் தான் தனக்கு வாழ்க்கை அளித்ததாகவும் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.






கேப்டன் மில்லர்


நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.  ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். பிரியங்கா மோகன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் படத்தில் நடித்துள்ளார்கள்.  ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.


பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.