நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய்பீம் படம் மூலம் அனைவரின் பாராட்டையும் பெற்ற த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இது ரஜினியின் 170வது படமாக உருவாகி வருகிறது.






லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங்  மும்பை, கேரளா, திருநெல்வேலி என நடைபெற்று இறுதியாக ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் நடைபெற்றது. இதுவரை 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் மீதமுள்ள காட்சிகளை விரைந்து முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 


கடந்தாண்டு டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலாவது வழக்கம். இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தொடர்ச்சியாக படங்களில் ரஜினி நடித்து வரும் நிலையில் வேட்டையன் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த படமும் ஜெய்பீம் படம் போல நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 






இப்படியான நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்  இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ரஜினி கையில் செல்போன் ஒன்றை வைத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 




மேலும் படிக்க: Sun TV Serials: லட்சுமி வந்த நேரம்.. சன் டிவி சீரியல்களில் நிகழப்போகும் மாற்றம்.. என்ன தெரியுமா?