ரெடின் கிங்ஸ்லி


எல் கே ஜி, ஏ 1 , கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி (Redin Kingsley). நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை ரசிகர்களைக் கவர்ந்தது.


வழக்கமான காமெடிகளில் இருந்து வேறுபட்ட ஒரு தன்மை ரெடின் கிங்ஸ்லியிடம் இருப்பதே அவரை மக்கள் ரசிப்பதற்கு காரணமாகிறது. சினிமாவில் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததால், நடனம் கற்றார். பின்னர் படத்தில் க்ரூப் டான்சராக இருந்தார். ஆனால், அவர் கொஞ்சம் குள்ளமாக இருந்ததால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து,நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ரெடின் கிங்ஸ்லி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.


படங்களில் காமெடியனாக  நடிக்கும் ரெடின் கிங்ஸ்லி ஒரு பிசினஸ் மேன் என்பது பரவலாக தெரியாத ஒன்று.  ஸ்பெல்போன் என்கிற மிகப்பெரிய நிகழ்ச்சி ஒருங்கிணைக்கும் நிறுவனம் ஒன்றை வைத்துள்ளாராம். பொருட்காட்சி, கண்காட்சிகளில் இடம்பெறும் பெரிய ஜெயண்ட் வீல்ஸ், கிட்ஸ் விளையாடும் செட் அப்கள் என எல்லாமே பண்றது கிங்ஸ்சோட கம்பெனி தானாம். மேலும் இவரின் சொத்து மதிப்பு 40 லிருந்து 50 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.


ரெடின் கிங்ஸ்லியின் திருமணம்


சினிமாவில் அங்கீகாரம் பெற்று பிஸியாகிவிட்ட ரெடின் கிங்ஸ்லி தன் திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்த சங்கீதா மற்றும் ரெடின் கிங்க்ஸ்லி ஆகிய இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்தது. ரெடின் கிங்ஸ்லிக்கு 46 வயது ஆவதால் இது தான் அவரது முதல் திருமணமா என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இது தான் அவருக்கும் அவரது மனைவி சங்கீதா அவர்களுக்கும் முதல் திருமணம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


வைரல் வீடியோ






ரெடின் கிங்ஸ்லியின் திருமணம் முடிந்து வெளியான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது திருமணத்திற்கு முன் மணமகளுக்கு மேக் அப் போட்ட வீடியோ, கிங்ஸ்லி  - சங்கீதா திருமண நிகழ்வுகள் அடங்கிய வீடியோ ஆகியவை இணையதளத்தில் வெளியாகி உள்ளன.


ஒப்பனைக் கலைஞர் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளார். தனது மனைவியின் அருகில் அமர்ந்து க்யூட்டாக ரெடின் போஸ் கொடுப்பது, காதல் பொங்கும் திருமண காட்சிகள் அடங்கிய இந்த வீடியோ வைரலாகியுள்ளது. பல வருட காதல் திருமணமான இத்திருமணம் பற்றி ரெடின் - சங்கீதா இருவரும் விரைவில் பகிர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.