நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் துவக்கவிழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார். இந்த நிகழ்வில் நடிகை ஜெனிலியா , சிவகார்த்திகேயன் , கார்த்தி , எஸ். ஜே சூர்யா , யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேலும் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படங்களைப் பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் முதல் படமான ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ இன்று வெளியானது.
ப்ரோ கோட் ப்ரோமோ
கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், உபேந்திரா, கௌரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருக்கிறது ப்ரோ கோட் படம். இப்படத்தின் ப்ரோமோவில் மூன்று மனைவிகள் தங்கள் கணவர் தன் மீது எவ்வளவு அன்பு செலுத்துபவராக இருக்கிறார். தன் சொல்லுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார் என பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று கணவர்களும் கூண்டுக்குள் அடைபட்ட குயில்களாக அப்பாவியாக முழிக்கிறார்கள். இந்த மூன்று கணவர்களுக்கு தங்கள் மனைவியை விட்டு தனியாக நிம்மதியாக இருக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் என்னவாகும் . அது என்ன வாய்ப்பு என்பதே ப்ரோ கோட் படத்தின் கதை.
ரவி மோகனின் சொந்த கதையா ப்ரோ கோட்
இந்த ப்ரோமோவை பார்க்கையில் இது ரவி மோகனின் சொந்த கதையா என கேட்கும் அளவிற்கு 10 பொருத்தங்களும் பக்காவாக இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக தனது மனைவியுடன் விவாகரத்து அறிவித்து தனித்து வசித்து வருகிறார் ரவி மோகன். ரவி மோகனின் மனைவி ஆர்த்தி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் மற்றும் யூடியுப் சேனல்களில் பகிரப்பட்டன. ரவி மோகனும் ஆர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் சொன்னதையும் இந்த ப்ரோமோவையும் வைத்து பார்க்கையில் இது ரவி மோகனின் ரிவெஞ்ச் போல் தெரிகிறதே என பலர் கூறி வருகிறார்கள்.