சோனியா அகர்வால் மற்றும் ரவி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 7ஜி ரயின்போ காலனி. இந்த திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். இன்றைக்கும் பலரது மொபைல் மியூசிக் பிளேயர்களை இப்பட பாடல்கள் நிறைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போல படத்தின் காட்சிகளும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் நாயகன் ரவி கிருண்னன் விகடன் நேர்காணல் ஒன்றில் 7ஜி ரயின்போ காலணி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளனர். 7 ஜி படத்தை தயாரித்த ஏ. எம். ரத்னம்  அவர்களின் மகன்தான் ரவி கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.







இது குறித்து பேசிய நடிகர் ரவி கிருஷ்ணா 7 ஜி படத்தில் நானும் சோனியாவும் முதல் சாய்ஸ் கிடையாது. முதல்ல மாதவன் இல்லைனா , சூர்யாவை வைத்துதான் படத்தை எடுப்பதாக திட்டமிட்டிருந்தார்கள். நான் அப்போதான் ஈஸ்டர் விடுமுறைக்கு வந்திருந்தேன். கதை சொல்லிட்டு , சூர்யா இல்லைனா மாதவனை ஃபிக்ஸ் பண்ண இருப்பதா சொன்னாங்க. நான் சரி பண்ணுங்கனு சொல்லிட்டேன். அந்த நேரத்துல சூர்யா சார் காக்க காக்க மற்றும் பிதாமகன் ஷுட்டிங்ல பிஸியா இருந்தாங்க. மாதவன் சார் , பிரியமான தோழி படத்துல பிஸியா இருந்தாரு.அதனால டேட்ஸ் கிடைக்கல . அப்போ அப்பா கேட்டாங்க.  இவங்க ரெண்டு பேருமே பிஸியா இருந்ததால யாரை ஹீரோவாக போடலாம்னு கேட்டாங்க.





அப்போ புதுமுகங்களை போடலாம்னு சொன்னாங்க.  அதுக்கு பிறகு செல்வா சார் என்னை செலக்ட் பண்ணாங்க. நான் அப்போ கொஞ்சம் குண்டா இருந்தேன். இரண்டு மாதத்துல ஸ்லிம் ஆன பிறகுதான் செல்வா சார் ஓக்கே சொல்லி, ஃபோட்டோ ஷூட் பண்ணாங்க. அதுக்கு பிறகு ஹீரோயினா சோனியாவை ஃபிக்ஸ் பண்ணி , எங்க ரெண்டு பேருக்கும் ஃபோட்டோ ஷூட் பண்ணாங்க. அதுக்கு பிறகு 300  பெண்களை ஆடிஷன் பண்ணோம். சுப்பிரமணியபுரம் சுவாதிதான் முதல் சாய்ஸ் . அவங்களை வச்சு 20 நாட்கள்  ஷூட்டிங் பண்ணிட்டோம் . ஆனால் அவங்க எம்.பி.பி.எஸ் படிச்சுட்டு இருந்தாங்க. கால்ஷீட் கிளாஷ் ஆனதால அவங்க நான் படத்துல இருந்து விலகுறேன்னு சொல்லிட்டாங்க. அதன் பிறகு சோனியா கடைசி நாள் கோவில் படப்பிடிப்புல இருந்தாங்க . உடனே அவங்கள ஃபிக்ஸ் பண்ணிட்டங்க. “ என தெரிவித்துள்ளார்.