Ranveer - Deepika: திருமண புகைப்படத்தை நீக்கிய ரன்வீர் சிங்! ஒருவேல அதுவா இருக்குமோ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தீபிகா படுகோன் உடனான தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்:

பாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டார் ஜோடிகளில் ஒன்று ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ராம்லீலா படத்தில் இருவரும் இணைந்து நடித்ததைத் தொடர்ந்து காதலில் விழுந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தீபிகா படூகோன் தனது முதல் குழந்தையை சுமந்து வருவதாக இருவரும் சேர்ந்து தகவல் வெளியிட்டார்கள்.

Continues below advertisement

ரன்வீர் - தீபீகா மீது விமர்சனங்கள்

 நடிகை தீபிகா படூகோன் முன்னதாக நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் உறவில் இருந்ததாகவும்  இந்த உறவின்போது ரன்பீர் கபூர் தன்னை ஏமாற்றியதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரன்வீரை அவர் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து தீபிகா ரசிகர்கள் அவருக்காக மகிழ்ச்சி அடைந்தார்கள். மறுபக்கம் இந்த தம்பதிகள் மேல் குறிப்பிட்ட நெட்டிசன்கள் வன்மத்தையும் வெளிக்காட்டி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு வெளியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் தீபிகா மற்றும் ரன்வீர் சிங் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார்கள். ரன்வீரை காதலித்து வந்தபோதே தான் பிற ஆண்களையும் டேட் செய்துவந்ததாக தீபிகா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூரின் ரசிகர்கள் தீபிகாவை கடுமையாக தாக்கி வந்தார்கள். ஆனால் இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகு தீபிகா மற்றும் ரன்வீர் சிங் செம கெத்தாக பாலிவுட் சினிமாவில் நடமாடி வருகிறார்கள்.

திருமண புகைப்படத்தை நீக்கிய ரன்வீர் சிங்

ரன்வீர் மற்றும் தீபிகா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தீபிகாவுடனான திருமண புகைப்படங்களை அனைத்தையும் நீக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்படைந்துள்ளார். பொதுவாக பிரபலங்கள் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்வதற்கு முன்பாக சமூக வலைதளங்களில் இருந்து தங்கள் இணையுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நீக்குவது வழக்கம்.

இதனால் ரன்வீர் மற்றும் தீபிகா அப்படியான அதிர்ச்சியை தரப்போகிறார்களா? என்று விவாதம் தொடங்கியுள்ளது. மறுப்பக்கம் ரன்வீர் சிங் தீபிகாவுடனான திருமண புகைப்படங்களை மட்டுமே நீக்கியிருக்கிறார் அவருடன் எடுத்துக் கொண்ட மற்ற புகைப்படங்களை அவர் நீக்கவில்லை. தனது திருமண ஆல்பத்திற்காக அவர் இந்த புகைப்படங்களை நீக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola