பல ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரஞ்சித், பிரியா ராமன் ஆகிய இருவரும் திருமண நாள் அன்று மீண்டும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகின்றனர் ரஞ்சித், பிரியாராமன் ஆகிய இருவரும்.






இவர்கள் நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று கடந்த 15 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர்.






நேற்று முன்தினம் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி வாழ்த்துக்களை கூறிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.