கொரோனா காலத்தில் பல இன்னல்களை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தனது படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த ஆதிவாசி மக்களுக்கு உதிவிகாரம் நீட்டியுள்ளார் நடிகர் ராணா டகுபதி. நடிகர் ராணா டகுபதி தற்போது வேணு என்பவருடைய இயக்கத்தில் விரட்ட பர்வம் என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகின்றார். உயர் பதவியில் உள்ள போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ராணாவிற்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட நிலையில் அங்கியிருந்த ஆதிவாசி குடும்பத்தினருடன் நல்ல நட்புடன் பழகியுள்ளார் நடிகர் ராணா. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்படும் அந்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்வித்துள்ளார் அவர். மிஹிக்க பஜாஜ் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ராணா என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான சுரேஷ் பாபு என்ற தயாரிப்பாளரின் மகன் தான் ராணா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் பிரபல நடிகர் வெங்கடேஷின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஸ்பிரிட் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்து வந்த ராணா 2010ம் ஆண்டு சேகர் என்பவரின் இயக்கத்தில் வெளியான லீடர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிசியாக இருந்த ராணா பாகுபலி திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
Jai Upcoming Movie | சுந்தர் சி-க்கு அடுத்து அட்லீ ; பிஸியாகும் ஜெய்!
வெகு சில படங்களே அவர் தமிழில் நடித்துள்ளார் என்றபோதும் பல்வாள் தேவனுக்கு தமிழில் ரசிகர்களுக்கு மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக காடன் படத்தில் நடித்த ராணா தற்போது விரட்ட பர்வம் மற்றும் ஐயப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக தடைபட்டுள்ள படங்களில் விரட்ட பர்வம் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மொழிகளில் வெளியான காடன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் காடன் திரைப்படம் தெலுங்கில் அரண்யா மற்றும் ஹிந்தியில் ஹாதிக்கே மெரி சாத்தி என்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ராணா உதவியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.