Rakul Preet : காதலிப்பதற்கு முன்பே இதை தெளிவாக பேசிட்டோம்...ரகுல் ப்ரீத்துக்கும், காதலருக்கும் இடையிலான டீல் இதுதான்

நடிகை ரகுல் ப்ரீது திருமணன் செய்துகொள்ள இருக்கும் ஜாக்கி பக்னானியுடன் அவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இதுதான்

Continues below advertisement

பாதுகாப்புணர்வும் வெளிப்படைத்தன்மையுமே ஒரு ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது என்று நடிகை ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்.

Continues below advertisement

ரகுல் ப்ரீத்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க'. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திக்யேன் நடித்த அயலான் படத்தில் ரகுல் ப்ரீத் நடித்திருந்தார். தொடர்ந்து . ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார் அவர்.

விரைவில் திருமணம்

நடிகை ரகுல் ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பல இடங்களில் டேட்டிங் செய்து வந்தனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி இந்த தம்பதியினரின் திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ரகுல் ப்ரீத் காதல் பற்றிய தன்னுடைய காதல் பற்றிய பார்வையையும் தன்னுடைய காதல் வாழ்க்கையை தான் எப்படி எதிர்கொண்டார் என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 நீங்கள் முழுமையான ஒருவராக இருக்க வேண்டும்.. 

”இன்னொருவரின் வாழ்க்கையை நிரப்புவதற்கு முன்பு நீங்கள் உங்களவில் முழுமையான ஒரு நபராக இருக்க வேண்டும் . இதைதான் நானும் ஜாக்கியும் டேட் செய்வதற்கு முன்பே பேசிக் கொண்டோம். ஒவ்வொருவரின் குறைகளை மற்றொருவருக்காக சரிசெய்துகொள்வதும் தயக்கப்படாமல் வெளிப்படையாக தங்களது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதும்தான் ஒரு ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் தீர்மானித்தோம். இதில் யாரோ ஒருவர் இன்செக்யூர்டாக இருக்கிறார் என்றால் அது நிச்சயம் வேலைக்கு ஆகாது. தங்களது லட்சியங்களை அடைய விரும்பும் பெண்கள் போதுமான காலம் எடுத்து தங்களுக்கு தகுந்த ஒரு துணையை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு திருமணத்தில் தங்களது குடும்பத்தை விட்டு , வீட்டை விட்டு முற்றிலும் புதிய சூழலுக்கு பெண்களே செல்கிறார்கள் . இதை முடிந்த அளவிற்கு பெண்கள் தங்களுக்கு சாதகமான ஒரு அம்சமாக நினைத்துக்கொள்வது நல்லது. உங்களது லட்சியங்களை புரிந்துகொண்டு அதற்கு துணை நிற்கும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்“ என்று ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்


மேலும் படிக்க : Ghilli Re-release: மீண்டும் களத்தில் இறங்கும் வேலு.. கில்லி படம் ரீ-ரிலீஸ் பற்றி வெளியான அறிவிப்பு!

Continues below advertisement
Sponsored Links by Taboola