கீரிடம் படத்தில் அஜுத்துடன் நடித்த அனுபவம் குறித்து விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல நடிகர் ராஜ் கிரண், “ கீரிடம் படத்துல அஜித் நடிச்சிக்கிட்டு இருந்தப்ப, அவருக்கு முதுகுல ஆப்ரேஷனெல்லாம் பண்ணியிருந்தது. ஷாட் முடிஞ்சா, கிடைக்கிற கேப்ல உட்காராம நடந்துக்கிட்டே இருந்தாரு. நான் இதை கவனிச்சிக்கிட்டே இருந்தேன்.




கொஞ்ச உன்னிப்பா கவனிச்சப்பதான் அவர் வலியை டைவர்ட் பண்றதுக்கு இப்படி நடந்தது தெரிய வந்துச்சு. ஒரு கட்டத்துல தாங்க முடியாத வலியில நடிச்சிட்டு இருக்குறதும் புரிய வந்துச்சு. அப்ப நான் போயி, சொல்றேன்ணு கோச்சுக்காதீங்க.. இவ்வளவு உடம்பு வலி இருக்குல்ல.. இதோட நடிக்கணுமா.. தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி உங்களுக்கு நல்லா தெரிஞ்சவருதானே.. அவர்கிட்ட சொல்லி, ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கிடக்கூடாதான்ணு கேட்டேன். உடனே அவர்,  “ பாலாஜி சார் எவ்வளவு பெரிய மனுஷன், என்ன நம்பி அவர் இப்படி ஒரு படத்தை ஆரம்பிச்சாருக்காரு..






அவர் மனசு கொஞ்சம் கூட வருத்தப்பட்ற கூடாது. நீங்க என்னோட வலியை நேரா பாக்கிறீங்க.. ஆனால் அவர் சென்னையில இருக்காரு.. நான் ரெஸ்ட் எடுத்தா.. யூனிட்- ல அவருக்கு உடம்பு வலியாம் அதான் ரெஸ்ட் எடுத்திருக்காருன்ணு சொல்லுவாங்க..


இப்ப நீங்க என்ன பாக்கிறீங்க.. புரிஞ்சிக்கிறீங்க.. ஆனா அவரால என்ன பார்க்க முடியுமா.. அதனால எக்காரணம் கொண்டும் பாலாஜி சார் மனசு நோக நான் காரணமா இருக்க மாட்டேன். இது வலிதன சார் தாங்கிக்கலாம். எனத் தெரிவித்தார். இந்த அஜித்தின் நல்ல மனசுதான் அவரை இவ்ளோ உயரத்துல வச்சிருக்கு” என்று பேசியுள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண