உலகநாயகன் கமலைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை சந்தித்துள்ளார்


மஞ்சும்மல் பாய்ஸ்


கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகளவில் ரூ/200 கோடி வசூல் செய்து மலையாளத் திரையுலகில் புதிய சாதனைப் படைத்துள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த பெரும் ஆதரவே இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். முதலில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தை பார்த்து படக்குழுவை சந்தித்த நிலையில் தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த பிரபலங்கள் படக்குழுவை சந்தித்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பார்த்து படக்குழுவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.