திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அங்குள்ள அறையில் தங்க வைக்கப்பட்டார்.
முன்னதாக, அங்கு சொகுசு காரில் வந்து இறங்கிய அவருடன் சிலர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பின்னர் அவரை தேவஸ்தானம் அதிகாரிகள் லிஃப்ட் வழியாக அழைத்துச் சென்று அறையில் தங்க வைத்தனர். அவர் நாளை ஏழுமலையானை தரிசனம் செய்வார் என்று தெரிகிறது.
சமீபத்தில் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னதாக, அவர் ஏற்கனவே நடித்து வெளியாகி பெரிதும் வரவேற்பைப் பெறாத பாபா படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இரு தினங்களுக்கு முன் 72வது பிறந்த நாளையும் அவர் கொண்டாடினார்.
முன்னதாக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசையமைப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்துவது மட்டுமல்லாமல் தற்போது திரைப்பட இயக்கம் மீதும் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து தயாரித்து வெளியிட்ட திரைப்படம் 99 சாங்ஸ்.
இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. இருப்பினும் ஏ.ஆர் திரைப்பட இயக்கம் சார்ந்த தன்னுடைய வேலைகளை தொடர்ந்து வருவதாகவே தெரிகிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் ‘லி மஸ்க்’. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் 36 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி உள்ள இந்த ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதே போல ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.