நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு மீண்டும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை டாக்டர், பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.
கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது.
கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது. மேலும் இதுவரை ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ரசிகர்களுக்கு மேலும் ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் கேமியோ ரோலில் நடிப்பதாக படப்பிடிப்பில் பங்கேற்ற அவரது புகைப்படத்துடன் சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அவர் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது ஹைதரபாத்தில் நடந்து வருகிறது.
இதற்காக அங்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.