Jailer Update: மாஸ் காட்டும் ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக்.. கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்..

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியும் நெல்சனும் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டது. 

ஆனால்  பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது.  அதெல்லாம் இல்லை என்னும் அளவுக்கு   முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில்  20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

அதேபோல் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola