நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 






சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படம் ஜெயிலர். கடந்தாண்டு தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த படம் வெளியானது. இதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகியிருந்தது. இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கும் போதே ரஜினியும் நெல்சனும் இணையும் ஜெயிலர் படத்தின் அறிவிப்பு வெளியானது. 


 பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனுடன் இணைவதை ரஜினி கைவிட்டு விட்டார் என தகவல் வெளியானது.  அதெல்லாம் இல்லை என அளவுக்கு படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் தேர்வு செய்யப்பட்டு  முன்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.






அனிருத் இசையமைக்கவுள்ள ஜெயிலர் படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதேபோல் தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதாக போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  


அதில் எண்ணூரில் நடக்கும் இரவு படப்பிடிப்பில்  மஞ்சள் சட்டை,காக்கி பேண்ட் அணிந்து லோக்கர் பார் ஒன்றில் இருந்து குடிபோதையில் நடிகர் ரஜினி நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.