ராஜஸ்தானின் கோல்டன் சிட்டி என அழைக்கப்படும் ஜெய்சால்மரில் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், ஜெய்சால்மரில் நடைபெற்று வரும் ஜெயிலர் பட ஷூட்டின்போது தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த தன் ரசிகரிடம் ரஜினிகாந்த் கனிவுடன் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி 


நட்சத்திர அந்தஸ்து, சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவற்றைத் தாண்டி நடிகர் ரஜினிகாந்தை அவரது எளிமை, கனிவான குணம், ரசிகர்களிடம் தன்மையாக நடந்து கொள்ளும் குணம் ஆகிய பண்புகளுக்காக அவரது ரசிகர்கள் இன்னும் கொண்டாடித் தீர்க்கின்றனர்.


உலகம் முழுவதுமுள்ள திரளான ரஜினி ரசிகர்கள் அவரது இந்த பண்புகளுக்காகவே கடல் கடந்தும் வந்து அவரை நேரில் சந்தித்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


இந்நிலையில் ஷூட்டிங் முடிந்து வெளியேறிய நடிகர் ரஜினிகாந்தின் காரை அவரது ரசிகர்கள் முற்றுகையிட்ட நிலையில், தான் மதுரையில் இருந்து வந்திருப்பதாகக் கூறிய ரசிகரிடமும் மற்ற ரசிகர்களிடமும் ரஜினி அன்பாக சிரித்தபடி கைக்குலுக்கிவிட்டு பயணிக்கிறார். ரஜினியின் இந்த க்யூட்டான செய்கை ட்விட்டரில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது.






ராஜஸ்தானில் ஜெயிலர் படக்குழு


அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் தமன்னா,  ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு  செய்கிறார்.


இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்துக்காக ‘முத்துவேல் பாண்டியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்ற வாரம் இப்படத்தின் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.


கூலாக உலா வரும் ஜாக்கி ஷெராஃப்


மேலும், 1987ஆம் ஆண்டு வெளியான ‘உத்தர் தக்‌ஷன்’ என்ற பாலிவுட் படத்துக்குப் பின் 36 ஆண்டுகள் கழித்து இருவரும் இந்தப் படத்தில் இணைவதால் இந்தி ரசிகர்களிடம் ஜெயிலர் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.


 






இதேபோல் முன்னதாக ஜெயிலர் பட கெட் அப்பில் நடிகர் ஜாக்கி ஷெராஃப் கூலாக வலம் வருவது. ரசிகர்களுடன் நேரம் செலவழிப்பது என ஃபன் செய்யும் வீடியோவும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.