அமரன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிய இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இதுவரை சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக 120 கோடி பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த சமீபத்திய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளன. இதனால் அமரன் படத்தின் மீது வசூல் ரீதியாக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமரன் படம் 100 கோடி வசூல் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமரன் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அமரன் படம் பார்த்து தன்னிடம் பேசியதை எஸ்.கே பகிர்ந்துகொண்டுள்ளார்.


சிவகார்த்திகேயனை வியந்து பாராட்டிய ரஜினிகாந்த்


" அமரன் படம் பார்த்து சூப்பர்ஸ்டர் ரஜினி சிவா நீங்க என்ன இப்டி நடிச்சிருக்கீங்க. எனக்கு படத்தில் எஸ்.கே தெரியவேயில்லை. நீங்க எப்டி யோசிக்குறீங்கனே எனக்கு தெரியல. மாவீரன் , அமரன் , டாக்டர் , அயலான் என்று வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள். நீங்க ரொம்ப பெருசா யோசிக்குறீங்க சிவா' என்று ரஜினி என்னிடம் கேட்டார். நிச்சயமாக வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையும் ஆனால் இந்த மாதிரி திறமையான இயக்குநர்கள் வரும்போது தான் நான் நினைப்பதை எல்லாம் பண்ண முடியும் என்று நம்புகிறேஎன்" என சிவகார்த்திகேயன் பேசினார்.