தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைலுக்கு என்றே தனி டிரேட் மார்க் இருக்கிறது. பொடிசு முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் அளவிற்கு அவரது பேச்சும் ஸ்டைலும் இருக்கும். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான முதல் நாளே ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்த லியோ படத்தை காட்டிலும் முதல் நாளே வசூல் மன்னனாகவும் ரஜினிகாந்த் மாறியுள்ளார். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், ரசிகர்கள் கூலி படத்தை கண்டு கழித்து வருகின்றனர். திரையுலகிற்கு வந்து 50 வருடங்களை கடந்து விட்ட நிலையில், திரை பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். . தமிழ் சினிமாவில் அவர் நடித்த பல படங்கள் பல தலைமுறையினரின் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு சாதாரண நபர், இந்திய திரையுலகை கட்டி ஆழும் அளவிற்கு பிரபலம் ஆனது பிரமிப்பூட்டும் பயணம் தான் ரஜினியின் வாழ்க்கை. 

74 வயதாகியுள்ள ரஜினிகாந்த், தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அனைத்து விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உடல்நலன் குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜிம் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் ஒர்க் அவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.