அஜித் குமார் லாக் அப் மரணத்திற்கு தமிழ் சினிமாவில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்கிற விமர்சனம் எழுந்த வந்த நிலையில் நேற்று நடிகர் சாந்தனு கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் ராஜ் கிரணும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார். 

அஜித் குமார் லாக் அப் மரணம்:

சிவகங்கை அருகே திருப்புவனத்தில் உள்ள கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்பவரை நகை காணாமல் போனதாக நிகிதா என்கிற பெண் கொடுத்த வழக்கில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

விசாரணையின் போது அஜித் குமார் காவல்துறையினர் கொடூரமான தாக்கப்பட்டு காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தாக தெரிவிக்கபட்டது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேசுப்பொருளாகி காவல்துறையினரின் செயலும் கடும் கண்டணத்திற்கு உள்ளானது. 

வாயை திறக்காத தமிழ் திரையுலகம்: 

கடந்த ஆட்சியில் எந்த சம்பவம் நடந்தாலும் வாயை திறக்கும் தமிழ் திரைநட்சத்திரங்கள் வாயை திறக்காமல் அமைதி காத்து வந்தது, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நடிகர்கள் சூர்யா, கமல், ரஜினி, சித்தார்த், கார்த்தி, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களையும் நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வந்தனர்.

சாந்தனு பதிவு: 

இந்த நிலையில் தான் தமிழ் சினிமாவில் இருந்து முதல் ஆளாக இயக்குனர் பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதில்

அஜித் குமாரின் லாக்கப் மரணத்தில் இன்னொரு மனித உயிரை இழந்துள்ளோம். தாமதமாகப் பேசுவதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனினும் மௌனம் ஒரு சரியான வழி அல்ல.

இன்னும் ஓர் அத்தியாயம், இன்னும் ஒரு வாழ்க்கை. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது. #JusticeForAjithkumar என்று அவர் பதிவிட்டு இருந்தார். 

ராஜ்கிரண் பதிவு:

தற்போது இந்த லாக் அப் மரணம் குறித்து நடிகர் ராஜ்கிரணும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்

தம்பி அஜித்குமாரை, ஐந்து ஆறு காவல்துறை யினர் சேர்ந்து, அடித்தே கொன்ற "கொடுங்கொலை"யை  நினைத்து நினைத்து நெஞ்சம் பதறுகிறது, இரத்தம் கொதிக்கிறது...
இதுபற்றி சமூக வலைத்தளங்களில், எவ்வளவோ செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன...ஆனால், இவற்றிற்கெல்லாம் மூல காரணமான, தம்பி அஜித்குமார் மீது புகார் அளித்ததாகக்கூறப்படும் "நிகிதா" என்ற பெண்ணை காவல்துறை கைது செய்து விசாரித்ததாக, இதுவரை எந்த செய்தியும் வந்ததாக தெரியவில்லை... என்ன நடக்கிறது ? ... ஏழை எளியவர் என்றால் உடனே பாயும் சட்டம்,
அதிகார வர்க்கத்திற்கு வேண்டியவர்கள் என்றால் பம்முமா...? மக்கள் எல்லாவற்றையும்
கண்காணித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு... என தனது பதிவில் ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார்.