இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்து நடிகர் ரகுமான் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் இப்படத்திம் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொன்னியில் செல்வனில்  நடிகர் ரகுமான் மதுராந்தகன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். செம்பியன் மகாதேவி மகனாக வரும் அவர் சோழப் பேரரசின் மன்னனாக முடிசூட விரும்புபவராக கதை நகரும். 


சில காட்சிகளே வந்தாலும் ரகுமான் தன் நடிப்பால் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்திருப்பார். 80களின் பிற்பகுதியில் தமிழில் வெளியான நிலவே மலரே படத்தில் அறிமுகமான ரகுமான் தொடர்ந்து புதுபுது அர்த்தங்கள், புரியாத புதிர், நீ பாதி நான் பாதி, சங்கமம், அன்புள்ள அப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து அஜித் நடித்த பில்லா படத்தில் வில்லனாக நடிக்க தொடங்கிய ரகுமான் ராம், துருவங்கள் பதினாறு என தன் பேர் சொல்லும் படங்களில் நடித்துள்ளார். <






இந்நிலையில் தான் பொன்னியில் செல்வனில் ரகுமான் நடித்திருந்தார். ஆனால் 25 வருடங்களுக்கு முன் இயக்குநர் மனோபாலா தன்னை அணுகி  சன் டிவி தயாரிப்பில் சீரியல் ஒன்றில் நடிக்க முடியுமா என கேட்டார். அப்போது ஹீரோவாக பிஸியாக இருந்த நான் சீரியலா என கேட்டு என்னவென்று விசாரித்தேன். அதற்கு மனோபாலா கதையெல்லாம் சட்டுன்னு சொல்லிவிட முடியாது என கூறி 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை கொடுத்தார். 10 முக்கிய கேரக்டர்கள் வரும். படித்து விட்டு எது வேண்டுமோ அதை செய்யுங்கள் என கூறினார். 


நானும் 3 ஆம் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது செலவு அதிகமாகும். பிற மொழிகளில் டப் செய்ய முடியாது என கூறி அந்த தயாரிப்பை கை விட்டாங்க. பின்னர் அந்த நாவல் குறித்த அறிவிப்பு வரும் போதெல்லாம் நம்மை நடிக்க வைக்க மாட்டாங்களா என நினைப்பேன். அந்த நாவல் பொன்னியின் செல்வன் தான். நினைச்ச மாதிரியே மணிரத்னம் கூப்பிட்டார். நிஜமாகவே பொன்னியின் செல்வனில் நடித்தது பெருமையாக உள்ளது" என ரகுமான் கூறியுள்ளார்.