சந்திரமுகி -2, ஜிகர்தண்டா - 2, திரைப்படங்கள் முடிவடைந்துள்ளது. திரைப்படங்கள் வெற்றிபெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் காமாட்சி அம்மன் கோவிலில் மற்றும் சங்கர மடம் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு ராகவ லாரன்ஸ் வந்ததை அறிந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்துபிடித்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம் வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் ( Raghava lawrence )
தமிழ் திரை உலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல திரைப்படங்களில், ஹீரோவாகவும், காஞ்சனா போன்ற பேய் படங்களில் நடித்து இயக்கியும் வெற்றி படமாக வலம் வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் சந்திரமுகி 2 திரையில் வெளியாக உள்ளது. சந்திரமுகி பாகம் 2, படம் வெற்றிபெற வேண்டி ராகவா லாரன்ஸ் காஞ்சிபுரம் ஆதிசங்கரர் அருள் பாலிக்கும் சங்கர் மடத்திற்கு சென்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதில் பங்கேற்று பின்பு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இளைஞர்கள்
நடிகை ராகவா லாரன்ஸ் கோவிலுக்கு வருகை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் நடிகருடன் புகைப்படம் செல்பி எடுக்க முந்திக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு ரசிகர் வெள்ளத்தில் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த நடிகருக்கு சிறப்பு தீபாராதனையும் செய்யப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.
பின் செய்தியாக சந்தித்த ராகவா லாரன்ஸ் : சந்திரமுகி -2 ( chandramukhi 2 ) , ஜிகர்தண்டா - 2, திரைப்படங்கள் முடிவடைந்துள்ளது. திரைப்படங்கள் வெற்றி பெற சாமி தரிசனம் மேற்கொள்ளவும், நேற்று நான் ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தேன், என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி உதவி அளிக்க வேண்டாம் என வீடியோ வெளியிட்டு இருந்தேன்.
6 மாதங்களாகவே நான் இதை தெரிவித்து வருகிறேன். எந்த ஒரு நல்ல முடிவை எடுத்தாலும் சாமி பாதத்தில் சொல்வது வழக்கம் அதேபோல காஞ்சி பெரியவா காலில் ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம். அதன் அடிப்படையில், ”இன்று காஞ்சி காமாட்சி அம்மனையும், பெரியவாவையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டேன் " என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதற்கு முன்பு காஞ்சி காமகோடி மரத்திற்கு சென்று விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், வெளியே இருந்த பல ஆதரவற்ற மக்களை சந்தித்து அவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்து உதவி புரிந்தார். இதனைப்பார்த்த அங்கிருந்த ஆதரவற்றோர் மற்றும் யாசகம் பெறுபவர்கள் அவரை சூழ்ந்துகொண்டு அவர் கொடுத்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டனர். கையை நீட்டிய அனைவருக்கும் ராகவா லாரன்ஸ் 500 ரூபாய் நோட்டை வழங்கினார்.