டிராக்டர் வழங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற பெயரில் சேவை அமைப்பினை கடந்த மே 1-ஆம் தேதி சென்னையில் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலமாக முதற்கட்டமாக ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏழை விவசாயிகள் 10 பேருக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்து, அதன்படி பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், நான்காவது டிராக்டரை மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமத்தில் சதீஷ் என்ற விவசாயிக்கு இன்று வழங்கப்பட்டது. இதனை விவசாயி சதீஷ் என்பவருக்கு வழங்கிய ராகவா லாரன்ஸ் அந்த டிராக்டரை கிராமம் முழுவதும் உள்ள அனைத்து ஏழை விவசாயிகளும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
டாஸ்மாக்கில் காலாவதியான பீர்... குடித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள்
முன்னதாக ராகவா லாரன்ஸூக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடித்து, மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவரோடு சேர்ந்து மகிழ்ச்சி பொங்க செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 10 டிராக்டர்கள் வழங்க உள்ளதாகவும், விரைவில் விதவைப் பெண்கள் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்க போவதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தனக்கு மிகுந்த வேதனையை அளித்து, அதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்கான உபகரணங்கள் வழங்க முடிவு செய்து தற்போது மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன். இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து இளையராஜா வைரமுத்து மோதல் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்த சேவை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது, அவர் எனது குரு அவருக்கு எனது நன்றி என்றார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ராகவா லாரன்ஸ் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோஷம், மக்கள் மீது விஜயும், விஜய் மீது மக்களும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் எதை செய்தாலும் அதில் அவர் வெற்றி பெற நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
மேலும், தொடர்ந்து பேசியவர், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தோல்வி என்பது வாழ்வில் கிடையாது, இரண்டு கை கால் இல்லாதவர்கள் கூட முயற்சி செய்து பல காரியங்களை செய்கின்றனர். தேர்வில் தோல்வி என்பது ஒரு சின்ன விஷயம், அதனை நாம் ஒரு படிக்கட்டாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் அரசு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்வீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு பார்த்து செய்வோம் என தெரிவித்து சென்றார்.