பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பற்றி நடிகர் பார்த்திபர் நேர்காணல் ஒன்றில் கொடுத்த பதில் ஒன்று ரசிகர்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளது. 


கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்துள்ளது. படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். படம் வெளியானதை கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் சென்ற அவர் அங்குள்ள பெரிய கோவிலில் தரிசனம் செய்தது மட்டுமல்லாமல், தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பார்த்திபன், தஞ்சாவூர் சென்று வந்ததற்கு ரூ.1 லட்சம் செலவானதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணம் ஒரு சரித்திர பதிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அதேசமயம் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனம், பிற படங்களுடன் ஓப்பிடு செய்யப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விமர்சனம் என்பது கம்பீரமாக இருக்க வேண்டும். அவர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமே தவிர ஒருத்தரை காலி செய்யும் விமர்சனமாக இருக்கக்கூடாது என பார்த்திபன் கூறினார். அதேபோல கல்கியின் பேத்தி அளித்த பேட்டியில் கூட பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் என்ன பண்ணிருக்காருன்னு தான் பார்க்க வந்தேன் என தெளிவாக குறிப்பிட்டார். அதனால் ஓப்பீடு என்பது தேவையில்லாதது. 


மணிரத்னம் பணத்துக்காக தான் பண்றாருன்னு நினைச்சா இந்த படம் எடுக்குற கேப்புல அவர் 2 படம் பண்ணிருக்கலாம். அவரின் வயது, உடல் நிலை பற்றி கவலைப்படாமல் எடுத்துருக்காரு. நானே நிறைய டைம் அவருடைய டென்ஷனை பார்த்துட்டு இதெல்லாம் தேவையான்னு கேட்டுருக்கேன். ஆனால் எல்லாரும் பண்றதை தவிர்த்து நாம வேற ஏதாவது பண்ணனும்  என சொல்வாரு. சொல்லப்போனா படம் வந்த பிறகு பொன்னியின் செல்வன் நாவலை அதிகமாக விற்க தொடங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். 


தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் இருபடத்திலும் சோழ அரசனாக நடித்தது எப்படியிருந்தது என்ற கேள்விக்கு, நான் மணி சார கூர்ந்து கவனிக்கத்தான் போனேன். இவர் எப்படி சரித்திர வசனங்களை பேச வைக்கப் போறாரு. அவரே அளந்து அளந்து தான் பேசுவாரு...இவருக்கு அதைப்பத்தி ஏதாவது தெரியுமா...அப்படி மணி என்ன கிழிச்சிருறான்னு பார்க்கத்தான் போனேன். அங்க பார்த்தா அவர் டயலாக் சொல்லி கொடுக்குறாரு..நான் அதை ரசிக்கிறேன். அவர் தீர்மானமா தான் இருந்தாரு..இந்த படம் இப்படித்தான் எடுக்கப்போறேன்னு என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.