Maria Juliana with Shariq: கட்டதுரை மகனுடன் ஜூலி... ‛ஆன்மா புத்துணர்ச்சி...’ என நெகிழ்ச்சி!

Maria Juliana with Shariq: இந்த முறை அல்டிமேட் சீசனில் அவருக்கு பலரின் நட்பு கிடைத்தது. குறிப்பாக, ரியாஸ்கன்-உமா ரியாய் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் உடன் ஜூலிக்கு நல்ல நட்பு கிடைத்துள்ளது.

Continues below advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து தான் பிரபலம் ஆகிறார்கள் என்று கூறப்படுவதுண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியையே பிரபலமாக்கியவர் பற்றி தெரியுமா? பிரபலமாக உள்ளே வந்து, அந்த பிரபலத்திற்கு நேர்மறையான பிரபலமாக வீடு திரும்பிய ஜூலியை அவ்வளவு எளிதில் யாரும் மறக்கமாட்டார்கள்.

Continues below advertisement

பிக்பாஸ் உள்ளவரை ஜூலி பெயர் நிலைத்திருக்கும் என்று கூட கூறலாம். காரணம், வீரத்தமிழச்சியாக அறியப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த ஜூலி, தன்னுடைய நடைமுறையால், தமிழர்கள் வெறுக்கும் தமிழச்சியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பின் மீம் கன்டண்டாக மாறி ஜூலி, அதிலிருந்து மீண்டு வர ரொம்பவே மெனக்கெட்டார்.

அதன் பின் இயல்பு நிலைக்கு திரும்பி, ஏச்சு, பேச்சுகளை கடந்து சமுதாயத்தில் முன்னேறி செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு முன்மாதிரியாக மாறினார். உண்மையில் அதற்கும் ஒரு துணிவு வேண்டும் தான். ஆனாலும், சமூக வலைதளத்தில் இன்றும் ஜூலிக்கு குடைச்சல் கொடுப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே எந்த பதிவு போட்டாலும், அதற்கு எதிர்ப்பு தருபவர்களாக இருப்பார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்ற ஜூலி, அதில் பங்கேற்ற போட்டியாளர்களுடன் நெருக்கமாக பழகினார். முந்தைய சீசனில் அவர் பங்கேற்ற போது, சக போட்டியாளர்களிடம் அவர் நட்பு கொண்டிருந்தது விமர்சிக்கப்பட்டதால், இந்த முறை அதில் அதிக கவனமுடன் இருந்தார். 

அந்த வகையில் இந்த முறை அல்டிமேட் சீசனில் அவருக்கு பலரின் நட்பு கிடைத்தது. குறிப்பாக, ரியாஸ்கன்-உமா ரியாய் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் உடன் ஜூலிக்கு நல்ல நட்பு கிடைத்துள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக, ஷாரிக் உடன் விதவிதமான போட்டோக்களை எடுத்த ஜூலி, ‛

இனிமையான நட்பு
ஆன்மாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது

என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்குள் சிலர் கமெண்ட் அடித்து வந்தாலும், ஜூலியை ஹேப்பியா பார்க்கிறது சந்தோசம் இருக்கிறது என்கின்றனர் ஒரு தரப்பினர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola