டாடா மோட்டார்ஸ் புதன்கிழமை தனது காம்பாக்ட் எஸ்யூவி நெக்ஸானின் புதிய வேரியண்ட்டை ரூ.9.75 லட்சத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வேரியண்ட் அதன் பிற எஸ்யூவி மாடல்களான XM+(S), XM (S) மற்றும் XZ+ டிரிம்களுக்கு இடையிலான டிசைன் எனக் கூறப்படுகிறது. மேலும் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயுடன் கூடிய ஏழு இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ராயலான பின்புறம் போன்ற பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் இந்த மாடல் வருகிறது. ஏசி வென்ட்கள், மழைக்கு ஏற்றவாறு செயல்படும் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் போன்றவை இதில் அடக்கம்.


இதுகுறித்துப் பேசியுள்ள டாடா மோட்டார்ஸ் பயணிகளுக்கான வாகனங்களை விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை தலைவராக இருக்கும் ராஜன் அம்பா,


''நாட்டில் நெக்ஸான் விற்பனையின் வளர்ச்சிப் பாதை என்பது அதன் அபரிமிதமான புகழ், அங்கீகாரம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவதற்கான எங்கள் வாக்குறுதி உள்ளடக்கியது,'' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை நெக்ஸான் ரகங்களில் சாலையில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்கள் பயணம் செய்துகொண்டிருக்கின்றன என்றும், இந்தியாவில் முன்னணி எஸ்யூவியாக தனது இடத்தை வெற்றிகரமாகக் தடம் பதித்துள்ளது என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி டாடா மோட்டார்ஸின் உறுதிப்பாட்டின் கொடியை நெக்ஸான் தாங்கி நிற்கிறது என்றும் அவர் மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






''இந்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சிறப்பம்சங்கள் நிறைந்த XM+(S)மாறுபட்ட வடிவத்தை  அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது நிச்சயமாக எங்களது நெக்ஸான் போர்ட்ஃபோலியோவை மேலும் பன்முகப்படுத்தும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை எங்கள் ஷோரூமுக்கு ஈர்க்கும்'' என்று அம்பா கூறினார்.


நெக்ஸான் வேரியண்ட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் ரக வகைகளில் 62 வகைகளைக் கொண்டுள்ளது, அதனால் இது பரந்த அளவிலான நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI